"தமிழகத்தின் சராசரி மின் தேவையைவிட சென்னையின் தேவை அதிகம்" - அமைச்சர் செந்தில்பாலாஜி

0 1597

தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் நுகர்வு அதிகரித்துள்ள போதிலும் மின் விநியோகம் சீராக உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்வது குறித்து அதிகாரிகளுடன் சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஒட்டுமொத்த தமிழகத்திற்கான சராசரி மின்தேவையைவிட சென்னையின் மின் தேவை அதிகமாக உள்ளதாக அவர் அவர் கூறினார்.

மின்சாரத்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments